< Back
மாநில செய்திகள்
அனந்தபுரம் அருகே  தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
விழுப்புரம்
மாநில செய்திகள்

அனந்தபுரம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
20 May 2022 10:51 PM IST

அனந்தபுரம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செஞ்சி,

அனந்தபுரம் அருகே உள்ள சி.என். பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் துரை மகன் சேரன் (வயது 44). கூலி தொழிலாளியான இவர், பக்கத்து ஊரான புதுக்கருவாட்சியில் உள்ள ஒரு இரும்பு பட்டறையில் வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சேரன் பட்டறையில் கிடந்த பழைய இரும்புகளை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதையறிந்த பட்டறை உரிமையாளர் சேரனை கண்டித்துள்ளார். இதனால் மனஉளைச்சலில் இருந்து வந்த சேரன் நேற்று காலை வேப்பமரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவருடைய மனைவி பேபிராணி கொடுத்த புகாரின்பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்