< Back
மாநில செய்திகள்
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
ஈரோடு
மாநில செய்திகள்

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
27 Oct 2023 2:39 AM IST

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

சென்னிமலை

வெள்ளோடு அருகே குமரன் நகரை சேர்ந்தவர் ரவீந்திரநாத் (வயது 48). தொழிலாளி. மனநிலை பாதிக்கப்பட்ட இவர் கடந்த 2 ஆண்டுகளாக கோவை நீலாம்பூரில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரவீந்திரநாத் வெள்ளோடு குமரன் நகரில் உள்ள வீட்டுக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று அவருடைய மனைவி ஸ்ரீ குமாரி வெளியில் சென்றுவிட்டார். தனியாக வீட்டில் இருந்த ரவீந்திரநாத் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் வெள்ளோடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ரவீந்திரநாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்