< Back
மாநில செய்திகள்
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
11 July 2023 12:15 AM IST

நாகர்கோவிலில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாகர்கோவில் நேசமணிநகர் தட்டான்விளை பகுதியை சேர்ந்தவர் முத்து கிருஷ்ணன் (வயது 66), தொழிலாளி. திருமணம் ஆகாத இவர் நேற்றுமுன்தினம் இரவு மது போதையில் வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் தனது அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி நேசமணி நகர் போலீசில் புகார் செய்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்