< Back
தமிழக செய்திகள்

வேலூர்
தமிழக செய்திகள்
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

5 July 2023 7:20 PM IST
குடும்ப தகராறில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர் தொரப்பாடி அவ்வை நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 42). தொழிலாளி. இவரது மனைவி புஷ்பலதா (40). இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் புஷ்பலதா வீட்டை விட்டு வெளியேறி கோவிலுக்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த ரவிச்சந்திரன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பாகாயம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.