< Back
மாநில செய்திகள்
பேரம்பாக்கம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
திருவள்ளூர்
மாநில செய்திகள்

பேரம்பாக்கம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

தினத்தந்தி
|
19 July 2023 3:27 PM IST

பேரம்பாக்கம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே உள்ள கூவம் கிராமத்தில் தனியார் செங்கல் தொழிற்சாலை உள்ளது. இங்கு திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் கொசவன்பாளையத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 34) என்பவர் தன்னுடைய மனைவி சின்ன பொண்ணு என்பவருடன் தங்கி கல் அறுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை. மதுப்பழக்கம் கொண்ட சுரேஷ் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து தன்னுடைய மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.

இதை தொடர்ந்து கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சின்ன பொண்ணு தன்னுடைய கணவரை விட்டு பிரிந்து சென்றார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த சுரேஷ் நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மது குடித்தார். பின்னர் தான் தங்கி இருந்த செங்கல் தொழிற்சாலைக்கு சென்று அங்கு இருந்த கொக்கு மருந்து (விஷத்தை) குடித்து விட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்த சக தொழிலாளிகள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் சுரேஷ் பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்