< Back
மாநில செய்திகள்
குடும்ப தகராறில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
திருவள்ளூர்
மாநில செய்திகள்

குடும்ப தகராறில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

தினத்தந்தி
|
9 Aug 2023 10:30 AM IST

குடும்ப தகராறில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஆர்.கே.பேட்டை,

பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே. பேட்டை ஊராட்சி ஒன்றியம் புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது 35). கூலி தொழிலாளி. இவரது மனைவி ஈஸ்வரி (31). சதீஷ்க்கு குடி பழக்கம் இருந்ததாக தெரிகிறது. குடும்பத்தை நடத்த பலரிடம் இவர் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் சதீஷ் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பூச்சி மருந்து (விஷம்) எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். இதை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி ஈஸ்வரி ஆர்.கே.பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

கோயம்புத்தூர் மாவட்டம் செட்டிபாளையம் விக்னேஷ் பார்க் பகுதியை சேர்ந்தவர் கோகுல் கண்ணன் (30). இவர் திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் திருவள்ளூர் தாலுகா போலீஸ் நிலையம் அருகே சி.டி.எச். சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியதில் கோகுல் கண்ணன் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு இடது கை தோள்பட்டையில் படுகாயம் ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்