திருவள்ளூர்
குடும்ப பிரச்சினை காரணமாக தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
|குடும்ப பிரச்சினை காரணமாக தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த செங்கல்சூளைமேடு கிராமத்தில் வசித்து வந்தவர் நாகராஜ் (வயது 33). சமையல் கியாஸ் சிலிண்டர் வீடுகளுக்கு சப்ளை செய்து வந்த இவருக்கு, திருமணமாகி வள்ளி (28) என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர்.
குடும்ப பிரச்சினை காரணமாக நாகராஜ், மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வயலுக்கு தெளிக்கும் புல்லு மருந்தை (விஷம்) எடுத்து குடித்தார்.
இதனையடுத்து உறவினர்கள், அவரை சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கூலித்தொழிலாளி நாகராஜீன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
திருவள்ளூர் அடுத்த பெரியகுப்பம் சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் கௌதம் (வயது 21) இவருக்கு சற்று மனநலம் சரியில்லாமல் இருந்து வந்ததாகவும் அதனால் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சிகிச்சை முடிந்து ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் கடந்த 14-ந் தேதி பரமசிவம் அவரது மனைவி இருவரும் வெளியே சென்றிருந்த நேரத்தில் மன அழுத்தம் காரணமாக கவுதம் வீட்டின் படுக்கை அறையில் மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.