கன்னியாகுமரி
மனைவியை பிரிந்து வாழ்ந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
|மனைவியை பிரிந்து வாழ்ந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 36), தொழிலாளி. இவர் சந்தையடி பகுதியை சேர்ந்த ராஜகுமாரி என்பவரை காதலித்து 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை நடந்து வந்தது. இதனால் சுரேசும், ராஜகுமாரியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். ராஜகுமாரி தனது தாயார் வீட்டில் 2 மகள்களுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் மனைவியை பிரிந்து மனவேதனையில் இருந்த சுரேஷ் நேற்று காலை வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.