< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
|22 Feb 2023 1:27 AM IST
பாப்பாக்குடி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
முக்கூடல்:
பாப்பாக்குடி அருகே உள்ள பள்ளக்கால் பொதுக்குடியைச் சேர்ந்த பூதத்தான் என்பவருடைய மகன் முத்துமாலை (வயது 29). கூலி தொழிலாளி. இவருக்கு பிரியா என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. இந்தநிலையில் கடந்த 17-ந் தேதி விஷம் குடித்தார். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு முத்துமாலை இறந்தார். இதுகுறித்து பாப்பாக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.