கன்னியாகுமரி
தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
|புதுக்கடை அருகே வீடு கட்ட வாங்கிய ரூ.10 லட்சத்தை திருப்பி செலுத்த முடியாததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
புதுக்கடை:
புதுக்கடை அருகே வீடு கட்ட வாங்கிய ரூ.10 லட்சத்தை திருப்பி செலுத்த முடியாததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வீடு கட்ட கடன்
புதுக்கடை அருகே குன்னத்தூர் சாத்தரை பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 51), தொழிலாளி. இவருக்கு ஜெயகுமாரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
குமரேசன் வீடு கட்டுவதற்காக தனியார் வங்கியில் ரூ.10 லட்சம் கடன் வாங்கினார். அவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாகவும், வேலை சரி வர கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் வீடு கட்ட வாங்கிய கடனுக்கான தவணை தொகையை 3 முறை மட்டுமே அவரால் செலுத்த முடிந்தது. அதன் பிறகு தவணை தொகையை செலுத்த முடியாததால் அவர் மன வருத்தத்தில் இருந்து வந்தார்.
தற்கொலை
இந்த நிலையில் சம்பவத்தன்று வெளியே சென்ற குமரேசன் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர்கள் தேடினார்கள். அப்போது பொற்றை விளை என்ற இடத்தில் குமரேசன் விஷம் குடித்து இறந்து கிடந்தார். இதுபற்றி புதுக்கடை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று குமரேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.