< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
திங்கள்சந்தை அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
|1 Feb 2023 12:21 AM IST
திங்கள்சந்தை அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திங்கள்சந்தை:
திங்கள்சந்தை அருகே உள்ள நெல்லியார்கோணம் புதுகாடுவெட்டிவிளையை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 63), கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகன் ஜெயராம் (29) இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.