< Back
மாநில செய்திகள்
மகளின் கணவர் இறந்த சோகத்தில்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

மகளின் கணவர் இறந்த சோகத்தில்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

தினத்தந்தி
|
19 Jan 2023 12:15 AM IST

மகளின் கணவர் இறந்த சோகத்தில்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கருங்கல்:

கருங்கல் அருகே உள்ள பூட்டேற்றி கல்லடைப் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது72), கூலித் தொழிலாளி. இவரது மகளின் கணவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இறந்தார். இதையடுத்து சுந்தர்ராஜ் மனமுடைந்து மது பழக்கத்திற்கு அடிமையானார். மேலும், ''மருமகன் இறந்ததால் எனது மகள் விதவையானதை பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை'' என அடிக்கடி கூறி வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று சுந்தர்ராஜ் வீட்டின் அருகே விஷம் குடித்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து மனைவி பேபி கொடுத்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்