கன்னியாகுமரி
தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
|திருவட்டார் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவட்டார்:
திருவட்டார் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவட்டார் அருகே உள்ள மாத்தூர் முண்டக்கல் பகுதியை சேர்ந்தவர் சேவியர் (வயது 51), தொழிலாளி. இவருக்கு மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. இந்த நிலையில் சம்பவத்தன்று சேவியர் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.
ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சேவியர் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி சேவியரின் மனைவி விஜயகுமாரி கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது சேவியர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்ததாகவும், இதனால் தற்கொலை முடிவுக்கு வந்ததாகவும் தெரிய வந்தது.