< Back
மாநில செய்திகள்
தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
திருநெல்வேலி
மாநில செய்திகள்

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

தினத்தந்தி
|
12 Jun 2022 3:10 AM IST

மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

திசையன்விளை:

திசையன்விளை அருகே வடிவம்மன்பட்டி நடு தெருவைச் சேர்ந்தவர் சங்கரநாராயணன் (வயது 42). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி, கோட்டை கருங்குளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறார்.

சங்கரநாராயணன் மனைவியிடம் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தும் அவர் செல்லவில்லை. இதனால் மனமுடைந்த சங்கரநாராயணன், கோட்டை கருங்குளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தின் அருகில் விஷம் குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார்.

உடனே அவரை ராதாபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி சங்கர நாராயணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்