கன்னியாகுமரி
தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
|தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அழகியபாண்டியபுரம்:
தென்காசி மாவட்டம் ராமலிங்கபுரம் புது காலனி பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 36), கூலித்தொழிலாளி. இவர் குமரி மாவட்டத்துக்கு வேலைக்கு வந்த போது தெள்ளாந்தி முடங்கன்விளையை சேர்ந்த சண்முகபிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு புத்தேரி கவிமணி தெருவில் குடும்பத்துடன் 10 ஆண்டாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் பரமசிவமுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தகராறு செய்து கொண்டு வெளியே சென்ற பரமசிவம் திரும்பி வரவில்லை. சண்முகபிரியா பல இடங்களில் தேடி வந்தார்.
இந்த நிலையில் துவரங்காடு முக்கடல் செல்லும் சாலையோரத்தில் பரமசிவம் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரமசிவம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பூதப்பாண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.