< Back
மாநில செய்திகள்
சகோதரருக்கு போனில் தகவல் தெரிவித்து விட்டு தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை;நாகர்கோவிலில் சோகம்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

சகோதரருக்கு போனில் தகவல் தெரிவித்து விட்டு தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை;நாகர்கோவிலில் சோகம்

தினத்தந்தி
|
20 Aug 2023 12:15 AM IST

நாகர்கோவிலில் சகோதரருக்கு போனில் தகவல் தெரிவித்து விட்டு தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் சகோதரருக்கு போனில் தகவல் தெரிவித்து விட்டு தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

குடும்ப தகராறு

நாகர்கோவில் குருசடி பகுதியை சேர்ந்தவர் ஆன்றனி ஆசீர்வாதம் (வயது 62), கட்டிட தொழிலாளி. இவருக்கு ரோஸ்மேரி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். ஆன்றனி ஆசீர்வாதம் குடும்ப பிரச்சினையால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்ததார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று இவர் தனது வீட்டின் ஒரு அறையை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு மதுவில் விஷம் கலந்து குடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் தனது தம்பி சூசை ஆன்றனியை செல்போனில் தொடர்பு கொண்டு மதுவில் விஷம் கலந்து குடித்த விவரத்தை கூறியுள்ளார்.

தற்கொலை

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் விரைந்து வந்து அண்ணன் இருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே பார்த்துள்ளார். அப்போது ஆன்றனி ஆசீர்வாதம் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து ஆசாரிபள்ளம் போலீசார் ஆன்றனி ஆசீர்வாதம் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து சூசை ஆன்றனி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சகோதரருக்கு போனில் தகவல் தெரிவித்து விட்டு தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்