< Back
மாநில செய்திகள்
தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

தினத்தந்தி
|
5 Aug 2023 1:57 AM IST

மதுகுடித்ததை மனைவி கண்டித்ததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ராஜாக்கமங்கலம்,

மதுகுடித்ததை மனைவி கண்டித்ததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தொழிலாளி

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அருகே பாம்பன்விளையை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 61), தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. நேற்று முன்தினம் வழக்கம்போல் சக்திவேல் வேலை முடிந்ததும் வீட்டுக்கு மது அருந்தி வந்ததாக தெரிகிறது. இதனை அவருடைய மனைவி கண்டித்துள்ளார்.

இதில் மனம் உடைந்த சக்திவேல் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

தற்கொலை

இதனால் மனைவி மற்றும் உறவினர்கள் அவரை தேடினர். அப்போது வெள்ளிச்சந்தை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு தென்னந்தோப்பில் அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தது தெரிய வந்தது. உடனே அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சக்திவேல் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுகுடித்ததை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்