< Back
மாநில செய்திகள்
பொதட்டூர்பேட்டையில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
திருவள்ளூர்
மாநில செய்திகள்

பொதட்டூர்பேட்டையில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

தினத்தந்தி
|
16 Aug 2022 1:40 PM IST

பொதட்டூர்பேட்டையில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை தர்மராஜா கோவில் தெருவில் வசித்து வருபவர் நாகராஜன் (வயது 45). கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. நாகராஜன் குடிப்பழக்கம் உள்ளவர். இதை அவரது மனைவி கண்டித்து வந்தார். இதனால் அவர் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று மனைவியை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டு்க்கு வெளியே நின்று கொண்டு நாகராஜன் நான் விஷத்தை குடிக்கிறேன் என்று கூறி பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பொதட்டூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்