< Back
மாநில செய்திகள்
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

தினத்தந்தி
|
28 April 2023 2:48 AM IST

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

கருங்கல்:

கருங்கல் அருகே உள்ள தேவிகோடு சரட்டவிளையை சேர்ந்தவர் சுந்தரம். இவருடைய மகன் சுந்தரேசன் (வயது30), தொழிலாளி. சுந்தரேசன் கடந்த ஒரு ஆண்டாக சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் அதிகாலையில் சுந்தரேசனின் தாயார் கமலம் பால் கறக்க சென்றார். அப்போது சுந்தரேசன் விவசாயத்துக்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டு வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார். இதைகண்ட அவரது தாயார் அதிர்ச்சி அடைந்து உறவினர்கள் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சுந்தரேசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி அவரது தாயார் கமலம் கருங்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று சுந்தரேசனின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்