கன்னியாகுமரி
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
|அருமனை அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
அருமனை
அருமனை அருகே உள்ள வெட்டுக்குழி பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப்(வயது 58), தொழிலாளி. இவருடைய மனைவி பல ஆண்டுகளுக்கு முன்பு விட்டார். இதனால், ஜோசப் தனது சகோதரி கிரேசியா வீட்டின் அருகில் வசித்து வந்தார். தனியாக வசித்து வந்ததால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஜோசப்புக்கு மது குடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. சம்பவத்தன்று காலையில் ேஜாசப் நீண்டநேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த அவரது கிரேசியா உள்ளே சென்று பார்த்தபோது அங்கு ஜோசப் விஷம் குடித்து இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், இதுபற்றி அருமனை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜோசப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஜோசப்பின் சகோதரி கிரேசியா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.