< Back
மாநில செய்திகள்
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
திருவாரூர்
மாநில செய்திகள்

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

தினத்தந்தி
|
21 Nov 2022 12:15 AM IST

முத்துப்பேட்டை அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

முத்துப்பேட்டை,:

முத்துப்பேட்டையை அடுத்த மேல உப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் புண்ணியசீலன் (வயது42).இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். புண்ணியசீலன் நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் விரக்தி அடைந்த புண்ணியசீலன் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை(விஷம்) எடுத்து குடித்து விட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்