< Back
மாநில செய்திகள்
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

தினத்தந்தி
|
29 Sept 2022 12:15 AM IST

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

குலசேகரம்:

பேச்சிப்பாறை அருகே உள்ள காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ராமசந்திரன் (வயது 62), தொழிலாளி. இவருடைய மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகின்றனர். இதனால், ராமசந்திரன் தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த ராமசந்திரன் திடீரென மாயமானார். இதையடுத்து உறவினர்கள் அவரை பல இடங்களில் ேதடியும் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் நேற்று முன்தினம் aபேச்சிப்பாறை அடுத்த மோதிரமலையில் உள்ள ஒரு ரப்பர் தோட்டத்தில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதை அந்த வழியாக சென்றவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே, இதுபற்றி பேச்சிப்பாறை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது, இறந்து கிடந்தவரின் அருகில் ஒரு விஷ பாட்டிலும் கிடந்தது. அதனால், அவர் விஷம் குடித்து இறந்தது தெரியவந்தது. மேலும், போலீசார் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தது ராமச்சந்திரன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ேமலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்