கன்னியாகுமரி
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
|பூதப்பாண்டி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
அழகியபாண்டியபுரம்,
பூதப்பாண்டி அருகே உள்ள காட்டுப்புதூர் நடுத்தெருவை சேர்ந்தவர் அரிச்சந்திரன் (வயது 46), தொழிலாளி. இவருக்கு மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். அரிச்சந்திரனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்தார்.
சம்பவத்தன்று மது குடித்து விட்டு மனைவியுடன் அரிச்சந்திரன் தகராறு செய்தார். பின்னர், அவர் வெளியே சென்றவர் விஷம் குடித்து விட்டு வந்து வீட்டு வாசலில் மயங்கி விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனே, அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அரிச்சந்திரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.