< Back
மாநில செய்திகள்
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
விழுப்புரம்
மாநில செய்திகள்

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

தினத்தந்தி
|
30 Aug 2023 12:15 AM IST

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி அருகே தென்னவராயன்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 49). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு குடி போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் அவர் திடீரென வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உறவினர்கள் உதவியுடன் முருகனை மீட்டு சிகிச்சைக்காக மண்ணாடிப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே முருகன் இறந்து விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து முருகன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்