< Back
மாநில செய்திகள்
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

தினத்தந்தி
|
7 Aug 2023 1:57 AM IST

குளச்சல் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

குளச்சல்,

குளச்சல் அருகே அஞ்சாலி பகுதியை சேர்ந்தவர் ஜாண்ட்ரோஸ் (வயது 74), தொழிலாளி. இவருக்கு செல்லத்தாய் (60) என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகள்கள் மற்றும் மகனுக்கு திருமணம் ஆகிவிட்டது. மகன் சுபின் (40) வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். மனைவி செல்லத்தாய் மற்றும் மருமகளுடன் வசித்து வந்த ஜாண்ட்ரோஸ் அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் செல்லத்தாய், கணவர் ஜாண்ட்ரோசை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜாண்ட்ரோஸ் கடந்த 2 நாட்களாக வீட்டில் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டு திண்ணையில் படுத்து தூங்கி ஜாண்ட்ரோசை நேற்று காலையில் காணவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி அக்கம் பக்கத்தில் ேதடினார். அப்போது அருகில் உள்ள தோப்பில் ஜாண்ட்ரோஸ் விஷம் குடித்து இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதார். பின்னர், இதுபற்றி செல்லத்தாய் குளச்சல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜாண்ட்ரோசின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்