திண்டுக்கல்
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
|வடமதுரை அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
வடமதுரை அருகே உள்ள காணப்பாடி ராமநாதபுரத்தை சேர்ந்தவர் சுப்பையா (வயது 43). இவர் தாடிக்கொம்பு அருகே உள்ள தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு செல்வி (38) என்ற மனைவியும், அஜித்குமார் (17), நிதிஷ்குமார் (14) என்ற மகன்களும் உள்ளனர். நேற்று முன்தினம் சுப்பையாவின் மூத்த மகன் அஜித்குமார் படிக்காமல் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தார். அதனைக்கண்ட சுப்பையா அஜித்குமாரை கண்டித்துள்ளார். அப்போது அஜித்குமார் சுப்பையாவை எதிர்த்து பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுப்பையா அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சுப்பையா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து செல்வி கொடுத்த புகாரின் பேரில் வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.