< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
'போக்சோ'வில் தொழிலாளி கைது
|21 April 2023 12:30 AM IST
நத்தம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோவில் ைகது செய்யப்பட்டார்.
நத்தம் அருகே உள்ள பூதகுடி சுண்டைக்காய்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது42). கூலித்தொழிலாளி. இவர் 9 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைக்கூறி, பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயிடம் கூறினார். உடனே அவர் நத்தம் போலீஸ்நிலையத்தில் ஆறுமுகம் மீது புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி விசாரணை நடத்தினார். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தார்.