< Back
மாநில செய்திகள்
நகை திருடிய தொழிலாளி கைது
திண்டுக்கல்
மாநில செய்திகள்

நகை திருடிய தொழிலாளி கைது

தினத்தந்தி
|
28 Jan 2023 10:41 PM IST

பெயிண்டு அடிக்க வந்த வீட்டில் நகை திருடிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஜி.ஆர்.பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 34). இவரது வீட்டில், கடந்த 10 நாட்களாக பெயிண்டு அடிக்கும் வேலை நடந்து வருகிறது. இந்த நிலையில் வீட்டில் பீரோவில் இருந்த 6 பவுன் நகை திருட்டு போய் விட்டது. இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஜெயச்சந்திரன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவுசல்யா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பெயிண்டு அடிக்க வந்த திருச்சி இந்திராநகரை சேர்ந்த தொழிலாளி பரமேஸ்வரன் என்பவர் நகையை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து கோவையில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து தங்க நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்