திண்டுக்கல்
மாமியாரை கத்தியால் குத்திய தொழிலாளி கைது
|பட்டிவீரன்பட்டி அருகே மாமியாரை கத்தியால் குத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள நெல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 31). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சூர்யா (25). கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சூர்யா அடிக்கடி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விடுவதை வழக்கமாக கொண்டு இருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் முத்துசாமிக்கும், சூர்யாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் முத்துசாமி மனைவியை சரமாரியாக தாக்கினார். அப்போது அங்கு வந்த சூர்யாவின் தாய் மகாலட்சுமி (40) மகளை அடிப்பதை பார்த்து தடுக்க முயன்றாா். இதில் ஆத்திரம் அடைந்த முத்துசாமி அங்கு கிடந்த கத்தியை எடுத்து மாமியாரை குத்தினார். படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசில் மகாலட்சுமி புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து முத்துசாமியை கைது செய்தனர். கணவன்-மனைவி சண்டையை தடுக்க முயன்ற மாமியாைர, மருமகன் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.