< Back
மாநில செய்திகள்
ரெயிலில் கஞ்சா கடத்திய தொழிலாளி கைது - 2 கிலோ பறிமுதல்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

ரெயிலில் கஞ்சா கடத்திய தொழிலாளி கைது - 2 கிலோ பறிமுதல்

தினத்தந்தி
|
19 March 2023 1:05 PM IST

ரெயிலில் கஞ்சா கடத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் நேற்று அதிகாலை ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில் போலீசார் திடீரென பயணிகளிடம் சோதனை செய்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து வந்த ரெயிலில் இருந்து இறங்கிய பயணி ஒருவரின் பையை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் சோதனை செய்தனர். அந்த பையில் 2 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.

இது குறித்து கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ஆந்திராவில் இருந்து ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியான சந்தன் குமார் புயான் (வயது24) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்