< Back
மாநில செய்திகள்
வெப்படை அருகே சிறுமியிடம் ஆபாசமாக பேசிய தொழிலாளி கைது
நாமக்கல்
மாநில செய்திகள்

வெப்படை அருகே சிறுமியிடம் ஆபாசமாக பேசிய தொழிலாளி கைது

தினத்தந்தி
|
12 Jun 2023 12:15 AM IST

வெப்படை அருகே சிறுமியிடம் ஆபாசமாக பேசிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் வெப்படை அருகே அல்லிநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 63). கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி, ஒரு மகன் உள்ளனர். இந்தநிலையில் காளியப்பன் அதே பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமியிடம் ஆபாசமாக பேசி உள்ளார். பயந்துபோன சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளாள். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வெப்படை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி வழக்குப்பதிவு செய்து காளியப்பனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அவர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்