< Back
மாநில செய்திகள்
மில்லில் பணம் திருடிய வடமாநில தொழிலாளி கைது
நாமக்கல்
மாநில செய்திகள்

மில்லில் பணம் திருடிய வடமாநில தொழிலாளி கைது

தினத்தந்தி
|
22 Nov 2022 12:06 AM IST

திருச்செங்கோடு அருகே மில்லில் பணம் திருடிய வடமாநில தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

எலச்சிபாளையம்

திருச்செங்கோடு சேலம் ரோடு பகுதியில் கடலைக்காய் மில் நடத்தி வருபவர் முருகேசன். இவர் கடந்த வாரம் தனது அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பணம் திருடு போனதாகவும், மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்த சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சியாமலால் கோட்டாவை காணவில்லை என்றும் புகார் அளித்தார். இதையடுத்து திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்தீஸ்கர் மாநிலத்திற்கு சென்றனர். அங்கு சியாமலால் கோட்டாவை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.4 லட்சத்து 40 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்