< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி கைது
|20 Oct 2022 12:29 AM IST
பரமத்திவேலூர் அருகே சிறுமியை திருமணம் செய்த தொழிலாளியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
பரமத்திவேலூர்
தொழிலாளி
பரமத்திவேலூர் தாலுகா, வசந்தபுரம் அருகே உள்ள மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் தனசேகரன் (வயது23). இவர் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் தனசேகரன் நாமக்கல் மாவட்டம் பாப்பிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பேசி வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் தனசேகரன் ஆசை வார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த பரமத்தி ஊர்நல அலுவலர் சுமதி பரமத்திவேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
கைது
இதன்பேரில் பரமத்திவேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்த தனசேகரன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அவரை போக்சோவில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.