< Back
மாநில செய்திகள்
தொழிலாளி கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

தொழிலாளி கைது

தினத்தந்தி
|
5 July 2022 3:06 AM IST

வாலிபரை தாக்கிய தொழிலாளி கைது


நெல்லை அருகே முன்னீர்பள்ளம் கொத்தன்குளத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 34). அதே பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (36). கூலி தொழிலாளி. உறவினர்களான இவர்களுக்குள் குடும்ப பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று முத்துக்குமாரை, சுரேஷ் அவதூறாக பேசி அவரை கையால் தாக்கினார். இதுகுறித்து முத்துக்குமார் கொடுத்த புகாரின் பேரில் முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்