< Back
மாநில செய்திகள்
தொழிலாளி கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

தொழிலாளி கைது

தினத்தந்தி
|
5 July 2022 2:37 AM IST

வீடு புகுந்து பொருட்கள் சூறை; தொழிலாளி கைது

பேட்டை:

நெல்லையை அடுத்த திருப்பணிகரிசல்குளம் மணிமேடை தெருவைச் சேர்ந்தவர் சரவணன்‌. டிரைவர். அதே பகுதியைச் சேர்ந்தவர் சுடலைமுத்து. கூலி தொழிலாளி. இவர்களுக்கு இடையே இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்தது.

நேற்று சுடலைமுத்து, சரவணனின் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த டி.வி., மேஜை, கட்டில் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், பேட்டை போலீசார் வழக்குப்பதிவு சுடலைமுத்துவை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்