< Back
மாநில செய்திகள்
ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் பணி 1-ந்தேதி தொடக்கம்
அரியலூர்
மாநில செய்திகள்

ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் பணி 1-ந்தேதி தொடக்கம்

தினத்தந்தி
|
28 July 2022 11:53 PM IST

ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் பணி 1-ந்தேதி தொடங்குகிறது.

இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலை உறுதி செய்வதற்காகவும், ஒரே வாக்காளரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதியில் இடம் பெற்றுள்ளதா? அல்லது ஒரே வாக்காளரின் பெயர் ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம் பெற்றுள்ளதா? என்பதை கண்டறியவும் வாக்காளர்களிடமிருந்து தன்விருப்பத்தின் அடிப்படையில் ஆதார் எண்ணை பெற்று வாக்காளர் பட்டியலில் இணைக்கும்படி உத்தரவிட்டுள்ளது. இப்பணியானது வருகிற 1-ந்தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. வாக்காளர் தன்விருப்பத்தின் அடிப்படையில் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பயன்பாட்டு செயலிகளான NVSP மற்றும் VHP ஆகியவற்றை பயன்படுத்தி இணைய வழியில் 6-பி படிவத்தை பூர்த்தி செய்து தாங்களே நேரடியாக ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து கொள்ளலாம் அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக இப்பணிக்கு வரும்போது தன்விருப்பத்தின் அடிப்படையில் படிவம் 6-பி படிவத்தினை பூர்த்தி செய்து சமர்பித்தும் அல்லது இது தொடர்பாக நடைபெற உள்ள சிறப்பு முகாம்களிலும் 6-பி படிவம் சமர்பித்தும் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து கொள்ளலாம். ேமற்கண்ட தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்