< Back
மாநில செய்திகள்
சொத்துவரி சீராய்வு குறித்த பணி
விருதுநகர்
மாநில செய்திகள்

சொத்துவரி சீராய்வு குறித்த பணி

தினத்தந்தி
|
12 July 2022 12:26 AM IST

காரியாபட்டியில் சொத்துவரி சீராய்வு குறித்த பணி நடைபெற்று வருகிறது.

காரியாபட்டி,

சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளதால் காரியாபட்டியில் உள்ள வீடுகளை அளவீடு செய்து எத்தனை சதுர அடி உள்ளதோ அதற்கு ஏற்றவாறு சொத்துவரி விதிக்கப்பட உள்ளனர். காரியாபட்டி பேரூராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சொத்து வரி சீராய்வு குறித்த பணிகளை பேரூராட்சிகளின் மதுரை மண்டல உதவி இயக்குனர் சேதுராமன் நேரடியாக சென்று வீடுகளை அளவீடு செய்து கள ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது பேரூராட்சி செயல் அலுவலர் ஸ்ரீ ரவிக்குமார், தூய்ைம பணி மேற்பார்வையாளர் ராம்குமார் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர். காரியாபட்டியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து பேரூராட்சி தலைவர் ெசந்திலிடம் ஆலோசனை வழங்கினார்.


மேலும் செய்திகள்