< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
சேவுகம்பட்டி சுங்கச்சாவடி திறக்க பணிகள் தீவிரம்
|18 March 2023 12:30 AM IST
சேவுகம்பட்டி சுங்கச்சாவடி திறக்க பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
திண்டுக்கல்லில் இருந்து குமுளி வரை ரூ.333.18 கோடியில் இருவழிச்சாலை அமைக்கும் பணிகள் கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கி தற்போது நிறைவடைந்துள்ளது. இதையடுத்து தேனி மாவட்டம் உப்பார்பட்டி அருகே சுங்கச்சாவடி திறக்கப்பட்டது. ஆனால் நகரின் புறவழிச்சாலை பணிகள் நிறைவடையாததால் திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியை அடுத்த சேவுகம்பட்டியில் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடி இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை.
இந்த நிலையில் தேனி புறவழிச்சாலை பணிகள் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இதையடுத்து சேவுகம்பட்டி சுங்கச்சாவடி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் அப்பகுதியில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அதே போல் சுங்கச்சாவடியை கடந்து செல்லும் வாகனங்களுக்கான கட்டண விவரங்கள் அடங்கிய பதாகைகளும் அங்கு வைக்கப்பட்டுள்ளன.