< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
கரும்பு வெட்டும் பணி தீவிரம்
|5 March 2023 12:01 AM IST
கரும்பு வெட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகாவில் உள்ள சிறுவயலூர் கிராமத்தில் பல ஏக்கர் பரப்பில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டிருந்தது. தற்போது கரும்பு வெட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு ஏக்கருக்கு கரும்பு வெட்டும் கூலி அதிகமாக இருப்பதாகவும், இருப்பினும் அதிக மகசூல் கிைடப்பதால் மகிழ்ச்சி அளிப்பதாகவும் விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. வெட்டப்பட்ட கரும்புகளை லாரி உள்ளிட்ட வாகனங்கள் மூலம் ஆலைக்கு அனுப்பும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.