< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்
|24 Sept 2023 5:15 AM IST
தேனி மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதற்கிடையே கம்பம் நகராட்சியில் கடந்த வாரம் 2 பேருக்கு டெங்கு பாதிப்பிற்கான ஆரம்ப நிலை கண்டறியப்பட்டது. இதனால் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்று நகராட்சி தலைவர் வனிதா நெப்போலியன், ஆணையர் வாசுதேவன் நகராட்சி ஆகியோர் சுகாதாரத்துறையினருக்கு உத்தரவிட்டனர்.
அதன்படி, நகராட்சி சுகாதார அலுவலர் அரசக்குமார் தலைமையில் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் சுழற்சி முறையில் வாகனம் மூலம் கொசு மருந்து அடிக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று கம்பம் தீயணைப்பு துறை அலுவலகம் உள்ளிட்ட பகுதியில் கொசு மருந்து அடிக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.