< Back
மாநில செய்திகள்
பணிபுரியும் நிறுவனங்களின் முழுவிவரத்தை அறிந்து செல்ல வேண்டும்
சிவகங்கை
மாநில செய்திகள்

பணிபுரியும் நிறுவனங்களின் முழுவிவரத்தை அறிந்து செல்ல வேண்டும்

தினத்தந்தி
|
26 Oct 2022 12:37 AM IST

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் பணி செய்யப் போகும் நிறுவனங்களின் முழுவிவரத்தை அறிந்து செல்லவேண்டும் என்று மாவட்டகலெக்டர் தெரிவித்துள்ளார்.


வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் பணி செய்யப் போகும் நிறுவனங்களின் முழுவிவரத்தை அறிந்து செல்லவேண்டும் என்று மாவட்டகலெக்டர் தெரிவித்துள்ளார்.

தகவல்

சிவகங்கை மாவட்டகலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாட்டை சேர்ந்த பல்வேறு உயர்தொழில்நுட்பக் கல்வி படித்த இளைஞர்களை மியான்மர், தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுக்கு வேலை, அதிக சம்பளம் என்று ஆசைகாட்டி சுற்றுலா விசாவில் ஏமாற்றி அழைத்துச் செல்வதாகவும் அங்கு அவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும் தகவல் வரப்பெற்றுள்ளது.

இனிவரும் காலங்களில் வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்லும் இளைஞர்கள், மத்தியஅரசில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம், வேலைக்கான விசா, முறையான பணி ஒப்பந்தம், என்ன பணி போன்ற முழுவிவரங்களை தெரிந்து கொண்டும், அவ்வாறு விவரங்கள் தெரியாவிட்டால், தமிழ்நாடு அரசை அல்லது சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்திய தூதரகங்களை தொடர்பு கொண்டு பணி செய்யப் போகும் நிறுவனங்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும்.

அறிவுரை

இந்திய தூதரகங்களின் இணையதளங்களில் வெளியிடப் படும் அறிவுரைகளின்படியும், வெளிநாட்டு வேலைக்கு செல்லும் இளைஞர்கள் கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், இது தொடர்பாக உதவி தேவைப்படின் 96000 23645, 87602 48625, 044-28515288 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Related Tags :
மேலும் செய்திகள்