< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
காரிமங்கலத்தில்ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி
|23 Sept 2023 1:00 AM IST
காரிமங்கலம்:
காரிமங்கலத்தில் ராமசாமி கோவில், கடைவீதி பஸ் நிலையம், பாலக்கோடு ரோடு, மொரப்பூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாலையை ஆக்கிரமித்து மேற்கூரை, வாகனம் நிறுத்துமிடம் ஆகியவற்றை அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நெடுஞ்சாலை துறை சார்பில் காரிமங்கலம் பஸ் நிலையத்தில் இருந்து ராமசாமி கோவில் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. நெடுஞ்சாலைத்துறை கோட்ட உதவி பொறியாளர் கவிதா, உதவி பொறியாளர் நவீன்குமார் ஆகியோர் மேற்பார்வையில் அலுவலர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.