தர்மபுரி
காரிமங்கலத்தில்அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் கூட்டத்திற்கு பந்தல் அமைக்கும் பணிதி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தொடங்கி வைத்தனர்
|தர்மபுரி:
காரிமங்கலத்தில் வருகிற 26-ந் தேதி ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது இதில் இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். இதையொட்டி காரிமங்கலம்-தர்மபுரி ரோட்டில் 10 ஆயிரம் பேர் பங்கேற்றும் அளவில் பந்தல் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை விழா நடைபெற்றது. மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன், கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தடங்கம் சுப்பிரமணி ஆகியோர் பூமி பூஜை செய்து பந்தல் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்கள் எம்.ஜி.எஸ்.வெங்கடேஸ்வரன், சிவகுரு, முன்னாள் எம்.பி. எம்.ஜி.சேகர், மாவட்ட துணை செயலாளர் மணி, ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன், கோபால், அடிலம் அன்பழகன், பஞ்சப்பள்ளி அன்பழகன், பேரூராட்சி தலைவர் பி.சி.ஆர்.மனோகரன், துணை தலைவர்கள் சீனிவாசன், சூர்யா தனபால், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஹரிபிரசாத், வக்கீல் அசோக்குமார், மகேஷ்குமார், கலைச்செல்வன், ராஜகோபால், செல்வராஜ், முத்தமிழ், விவசாய அணி அமைப்பாளர் குமரவேல், ஒன்றிய பொருளாளர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.