தர்மபுரி
தர்மபுரி நகரில்பாதாள சாக்கடையில் அடைப்புசீரமைக்கும் பணி தீவிரம்
|தர்மபுரி:
தர்மபுரி 4 ரோடு அருகே கிருஷ்ணகிரி சாலையில் ஆவின் பாலகம் எதிரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக கழிவுநீர் சாலையில் வழிந்து ஓடியது. இதனால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளானார்கள். மேலும் பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தால் வணிகர்கள் பாதிப்படைந்தனர். இந்த நிலையில் அடைப்பு ஏற்பட்டுள்ள பாதாள சாக்கடையை சீரமைக்கும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். நகராட்சி ஆணையாளர் புவனேஸ்வரன் மேற்பார்வையில் நவீன எந்திரங்கள் மற்றும் பொக்லைன் எந்திரம் மூலம் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
தர்மபுரி 4 ரோடு அருகில் இந்த சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் கிருஷ்ணகிரி சாலையில் ஒரு வழிப்பாதையில் வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் சீரமைப்பு மற்றும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.