< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
2 கன்றுகளை ஈன்ற அதிசய பசு
|27 Jun 2022 11:52 PM IST
2 கன்றுகளை பசு ஈன்றுள்ளது.
கரூர் மாவட்டம், நங்கவரம் பேரூராட்சி, சிவன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் ஆண்டு (வயது 75). விவசாயி. இவருக்கு சொந்தமான பசு அடுத்தடுத்து ஒரே நேரத்தில் 2 கன்றுக்குட்டிகளை ஈன்றது. பின்னர் சிறிது நேரத்தில் தனது தாய் பசுவிடம் 2 கன்றுகள் பால் குடித்தது. தற்போது தாய் பசுவும், 2 கன்றுக்குட்டிகளும் நலமாக உள்ளது. இதனால் நாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக ஆண்டு குடும்பத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து 2 கன்றுகளை ஈன்ற அதிசய பசுவை அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் வந்து பார்த்து சென்றனர்.