< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம்
|9 Sept 2023 11:40 AM IST
பல்வேறு மாவட்டங்களில் இருந்து விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
சென்னை,
விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி பொறுப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொகுதி வாரியாக மகளிர் அணி நிர்வாகிகளை நியமிப்பது பற்றி ஆலோசனை நடைபெறும் எனவும், மகளிர் அணியை சிறப்பாக கட்டமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.