< Back
மாநில செய்திகள்

கரூர்
மாநில செய்திகள்
மகளிர் உரிமை திட்டம்: விண்ணப்ப நிலை அறிய காத்திருந்த பொதுமக்கள்

21 Sept 2023 12:00 AM IST
மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப நிலை அறிய பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்
தமிழகத்தில் கடந்த 15-ந்தேதி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கரூர் மாவட்டத்தில் இத்திட்ட செயல்பாடுகள் குறித்து உரிய தகவல்கள் வழங்கிடவும், பொதுமக்களின் கோரிக்கைகள், குறைகள் ஆகியவற்றின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவும் மாவட்ட கலெக்டர் அலுவலகம், அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கரூர் தாலுகா அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த உதவி மையத்தில் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பான சந்தேகம் மற்றும் விண்ணப்பத்தின் நிலை ஆகியவற்றை தெரிந்து கொள்ள ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.