< Back
மாநில செய்திகள்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட ெதாடக்க விழா
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட ெதாடக்க விழா

தினத்தந்தி
|
16 Sept 2023 12:30 AM IST

செம்பனார்கோவிலில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட ெதாடக்க விழா நடந்தது. இதில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார்.

திருக்கடையூர்;

செம்பனார்கோவிலில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட ெதாடக்க விழா நடந்தது. இதில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் உமாமகேஸ்வரி சங்கர், ஒன்றியக்குழு தலைவர்கள் நந்தினிஸ்ரீதர், காமாட்சி மூர்த்தி, பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு திட்டத்தின் வங்கி கணக்கு பற்று அட்டையை (ஏ.டி.எம்.) வழங்கி பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-

அண்ணா பிறந்த நாள்

அண்ணா பிறந்தநாளை கொண்டாடும் வகையில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.இந்தியாவில் எந்த மாநிலமும் செய்யாத திட்டத்தை நம் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்துள்ளார். தமிழ்நாட்டில் முதியோர் உதவித்தொகை, அமைப்புசாரா தொழிலாளர் உதவித்தொகை என மாதம் ரூ.1200 வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நேரடியாக 1 கோடியே 45 லட்சம் குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன.

குறுஞ்செய்தி

மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 413 நியாயவிலைக் கடைகளில் 2லட்சத்து84ஆயிரத்து170 குடும்ப அட்டைகள் உள்ளன. இன்று(நேற்று) 9312 நபர்களுக்கு பற்று அட்டை (ஏ.டி.எம்.) கார்டு வழங்கப்பட்டுள்ளது. பற்று அட்டையுடன், காகிதப் பையில் அரசின் தொகுப்பு புத்தகம் வழங்கப்பட உள்ளது. 2ஆயிரம் பேருக்கு இன்று(நேற்று) மேடையிலும், மீதி உள்ளவா்களுக்கு கிராம நிர்வாக அலுவலர் மூலம் வீடு வீடாகவும், மற்ற அரசு நிகழ்ச்சிகளிலும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பாக குறுஞ்செய்தி வராதவர்கள் அரசுக்கு தகவல தொிவிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் கண்மணி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்