< Back
மாநில செய்திகள்
மகளிர் குழுவினர் பொருளாதார மேம்பாடு அடைய கருத்துகளை வழங்க வேண்டும்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

மகளிர் குழுவினர் பொருளாதார மேம்பாடு அடைய கருத்துகளை வழங்க வேண்டும்

தினத்தந்தி
|
24 Feb 2023 12:21 AM IST

கல்லூரி சந்தை மூலம் மகளிர் சுய உதவி குழுக்களின் செயல்பாடுகளை தெரிந்து கொண்டு பொருளாதார மேம்பாடு அடைய கருத்துகளை மாணவர்கள் வழங்கிட வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் கூறினார்.

தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களை பற்றி இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் அறியும் வகையில் கல்லூரி சந்தை என்ற நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி அருகே இந்திலியில் உள்ள ஆர்.கே.எஸ். கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், கல்லூரி முதல்வர் மோகனசுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் ஷ்ரவன்குமார் பேசியதாவது:-

மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி, உற்பத்தித்திறன், மதிப்புக்கூட்டல், சந்தைப் படுத்துதல் போன்றவற்றை மேம்படுத்துவதற்காக கல்லூரி மாணவர்கள் மூலம் ஆலோசனை பெறுவதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

கல்லூரி மாணவர்கள் மகளிர் சுய உதவி குழுக்களின் செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொண்டு கல்லூரி சந்தை மூலம் பொருளாதார மேம்பாடு அடைய கருத்துகளை வழங்கிட வேண்டும்.

ஊட்டச்சத்து உணவு

சுய உதவி குழுவின் தயாரிப்புகளை கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பயன்படுத்தி ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை உருவாக்கி கொள்ள வேண்டும்.

சுய உதவிக்குழு பெண்களுக்கு பரஸ்பர நன்மைக்காக சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களின் தரத்தை மேம்படுத்தும் வகையில் ஆலோசனை மற்றும் அறிவுரைகளை வழங்க வேண்டும். இச்செயல் முறையின் மூலம் சுய உதவி குழு பெண்கள் பொருளாதார மேம்பாடு அடையவும், உற்பத்திகளை சந்தைப்டுத்துவதற்கும் கல்லூரி சந்தை மிக நல்ல வாய்ப்பாக அமையும்.

மாணவர்கள் பொது அறிவை வளர்த்துக்கொள்ள தினசரி செய்திதாள் படிக்கும் வழக்கத்தையும் உருவாக்கி கொள்ள வேண்டும்.

இவ்வாற அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் கோவிந்தாஜூ, கல்லூரி துணை முதல்வர் ஜான்விக்டர் மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்