< Back
மாநில செய்திகள்
மகளிர் குழுவினர் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

மகளிர் குழுவினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
27 May 2022 10:19 PM IST

டாஸ்மாக் கடையை மாற்றக்கோரி மகளிர் குழுவினர் ஆர்ப்பாட்டம்

சின்னசேலம்

சின்னசேலம் அருகே வரதப்பனூர் கிராம எல்லையில் அரசு டாஸ்மாக் கடை கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த கடையை இடமாற்றம் செய்யக்கோரி மகளிர் சுயஉதவி குழு பெண்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் மனு கொடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் குறிப்பிட்ட டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி மகளிர் சுயஉதவி குழு பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்த மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், கோட்ட கலால் அலுவலர் வாசுதேவன் ஆகியோர் விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டாஸ்மாக் கடையை ஒரு மாதத்துக்குள் வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதை ஏற்று அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்